Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் தீபாவளி கடைகளுக்கு ரூ.3500 வசூல்..

கரூரில் தீபாவளியை முன்னிட்டு கோவில் அருகே தகரக் கொட்டகை தகரக் கடைகள் அமைக்க ரூ.3,500 வசூல்: கடந்த முறையை விட இந்த முறை அதிகம் வசூல் செய்வதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு: ஆளும் கட்சியினை செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் கரூர் ஜவஹர் பஜார் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகள் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தந்து ஜவுளி, பட்டாசு, கவரிங் நகைகள், காலணிகள், வளையல்கள் என பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய கடைகள் அமைத்து வருகின்றனர்.

ஆனால், இந்த தற்காலிக கடைகள் அமைப்பதில் தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

குறிப்பாக, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகரக் கொட்டகைகள் அமைத்து தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி நிர்வாகம் தரைக்கடைகள் அமைக்க எந்தவித அனுமதியும் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் 100க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைத்து வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

10க்கு 10 அடி அளவிலான ஒரு கடைக்கு 3,500 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், கூடுதல் இடத்திற்கு கூடுதல் கட்டணம் கேட்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு இதேபோன்ற கடைகளுக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும்,
அதுமட்டுமின்றி, தகரக் கொட்டகை வேண்டாம் எனக் கூறினாலும், கட்டாயம் அமைத்தே ஆக வேண்டும் என வலியுறுத்தப்படுவதாகவும் கூறினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கடைகள் அமைக்க மாநகராட்சி சார்பில் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!