தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சையில் போதை பொருளுக்கு எதிரான மாறத்தான் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தஞ்சையில் போதையை விடு கல்வியை எடு என்று மாணவர்களிடையே போதைப் பொருளுக்கு எதிராவும் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மரத்தான் போட்டி ப்போட்டியினை மாநில பொதுச் செயலாளர் விஜிபுர் ரஹ்மான் தொடங்கி வைத்தார். போட்டியில் மாணவர்களுக்கு போதைப் பொருளுக்கு எதிராக மற்றும் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவும் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
