Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவர் சாவு

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சியில் விபத்து

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவர் சாவு

திருச்சி தில்லைநகர் ரஹ்மானியபுரத்தைச் சேர்ந்த முனிசாமி (வயது 76) இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று ஈஸ்வரி கார்டன் 1வது தெரு சந்திப்பு அருகே தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்று வலதுபுறமாக திரும்பியுள்ளார்.
​அப்போது அதே திசையில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் அரியலூர் மாவட்டம் செந்துறை சேர்ந்த சக்திவேல் (வயது 20) வந்த சக்திவேல் (வயது 20) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் முனிசாமியின் வாகனம் மீது பின்னால் மோதியது.
இந்த விபத்தில் முனிசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி
முனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
​இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து
புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வலிப்பு நோயால் ஒருவர் சாவு

​திருச்சி, உறையூர், சிவா நகர், ராமலிங்க நகரைச் சேர்ந்த ஜோமி பிரான்சிஸ் (வயது 53) என்பவர், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
​இந்நிலையில், நேற்று காலை
அவருக்கு திடீரென காக்காய் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரது மகனும், எவின் ஜோமி தனது தந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
​இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!