ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள HPCL எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ‘Pitch’ எனப்படும் பெட்ரோலியப் பொருளைச் சேமிக்கும் தொட்டியில் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தீயணைப்புப் படையினர் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் தீவிர நடவடிக்கையால், தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக HPCL நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
விசாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து
