Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூருவில் உணவகத்துக்குள் அதிவேக கார் புகுந்து விபத்து – 3 பேர் படுகாயம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர்ப் பகுதியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பன்னர்கட்டா அருகே உள்ள ஹொம்மதேவனஹள்ளி கிராமத்தில் ‘ஹலேவூரம்மா கபாப் சென்டர்’ என்ற பிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதிய அந்த கார், கண் இமைக்கும் நேரத்தில் கபாப் கடையின் சமையல் பகுதிக்குள் புகுந்தது. காரின் வேகத்தால் சமையல் மேடை மற்றும் அங்கிருந்த பொருட்கள் நொறுங்கின.

கார் மோதிய வேகத்தில், சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட பெரிய வானலியில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் அங்கிருந்தவர்கள் மீது சிதறியது. இதில் கடையில் பணியில் இருந்த பசவராஜ், முனிகிருஷ்ணா மற்றும் மங்கேஷ் ஆகிய 3 பேருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காரை ஓட்டிவந்த பெண்ணிற்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

error: Content is protected !!