Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பள்ளி மாடியிலிருந்து குதித்த 10ஆம் வகுப்பு மாணவன் – தீவிர சிகிச்சை!

திருச்சியில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் திடீரென்று மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த மாணவன் ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பள்ளி மாணவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருச்சி மாநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவன் இன்று காலை திடீரென்று பள்ளியின்மேல் மாடியில் இருந்து குதித்தாகதெரிகிறது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அந்த மாணவன் ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து
கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பள்ளி மாணவன் திடீரென்று மாடியிலிருந்து கீழே விழுந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பத்தாம் வகுப்புமாணவனாக இருப்பதால் அவருக்குபடிப்பு தொடர்பாக ஆசிரியர்கள் யாராவது தொல்லை கொடுத்தார்களா அல்லது மன உளைச்சலில் பள்ளி மாணவன் மாடியிலிருந்து கீழே விழுந்தாரா என்பது தெரியவில்லை இந்த சம்பவம் அந்த தனியார் பள்ளி மாணவர்கள்இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!