தீபாவளியை முன்னிட்டு திங்கள்கிழமையுடன் சேர்த்து 3 நாள்கள் விடுமுறையை TN அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக நவ.5 முதல் 7-ம் தேதி வரை 15,659 பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னையில் 16 இடங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம். அத்துடன் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
தீபாவளிக்காக 15,659 சிறப்பு பஸ்கள் ரெடி!
