அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதன்முறையாக பங்கேற்ற ரேச்சல் அபா (24) என்ற இளம்பெண், இலக்கை அடைய 2 மைல் தூரம் இருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தீவிர உடற்பயிற்சி மற்றும் களைப்பால் எலும்புகள் மற்றும் தசை நார்கள் சிதைந்து, அதில் உள்ள நச்சு பொருட்கள் ரத்தத்தில் கலக்கும் ‘ராப்டோமைலிசிஸ்’ என்ற உடல்நலப் பாதிப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரத்தான் ஓட்டத்தில் மயங்கி விழுந்து இளம்பெண் பலி
