Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண் மீது தாக்குதல்…. ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் பணம் திருட்டு…திருச்சி க்ரைம்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை திருட்டு – போலீசார் விசாரணை!

இரும்பு கடையில் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

​திருச்சி விமான நிலையம் காவல் நிலைய எல்லைக்குட்பட் காந்தி நகர், காஜமலை மெயின் ரோடு பகுதியில் பழங்கால இரும்பு கடை நடத்தி வருபவர் லியாகத் அலி (41) இதே போன்றுஅழகிய ஐஸ்வர்யா நகர், திருமாமலை சமத்துவம், ஒலையூர், திருச்சி). இவர் கடந்த 3 அன்று இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த ரூ.3,500 ரொக்கத்தைத் திருடிச் சென்றுள்ளனர். ​இதுகுறித்து புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து இச்சம்பவம் தொடர்பாக முகமது யாசின் அரபாத் (வயது19) எடமலைப்பட்டி புதூர்) மற்றும் பரத் (19) எடமலைப்பட்டி புதூர்) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ 2.28 லட்சம் பணம் திருட்டு

​தஞ்சை மாவட்டம், மனோஜிப்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை (62). இவர் தனது மனைவியுடன் தஞ்சசைல் இருந்து திருச்சி பால்பண்ணைக்கு வந்துள்ளார். பிறகு அங்கிருந்து காந்தி மார்க்கெட்டிற்கு தனியார் நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்த பஸ்சில் காந்தி மார்க்கெட் அருகே வந்து இறங்கிப் பார்த்தபோது, அவர் வைத்திருந்த தோள்பைக்குள் இருந்த ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பணம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
​இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசில்புகார் கொடுக்கப்பட்டது இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி இடம் பணத்தை தேடிச் சென்ற மர்ம ஆசாமியை தொலைபேசி தேடி வருகின்றனர்.

​உறையூரில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

உறையூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் தாய், கடந்த 3 ஆம் தேதி அன்று காலை வீட்டைப் பூட்டிவிட்டு கரூர் சென்றுள்ளார். பின்னர் அன்று இரவு 9 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.9 ஆயிரம் பணம் மற்றும் 2 கிலோ எடையுள்ள செப்புக் கம்பி
ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
​இந்தச் சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை -மனைவி கோபித்து சென்றதால் விபரிதம்


திருச்சி மாவட்டம் துறையூர் காளியம்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் போஜன்.இவரது மகன் சின்ராசு (வயது 27).
இவருக்கும் கௌசல்யா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது.
கணவன் -மனைவி இருவரும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வாடகைக்கு வீடு பிடித்து குடும்பம் நடத்தி வந்தனர். சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் கௌசல்யா கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் தனியாக வசித்து வந்த சின்ராசு நேற்று முன்தினம் காளியம்பட்டியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு வந்தார். பின்னர் கடும் மன உளைச்சலில் இருந்த சின்ராசு வீட்டில் யாரும் எதிர்பாராத வகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது குறித்து அவரது தாயார் பழனியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர் திடீர் தற்கொலை- போலீஸ் விசாரணை


முசிறி குருவிக்காரன் குளம் தெற்கு குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40) இவர் புலிவலத்தில் உள்ள உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
மது பழக்கத்துக்கு ஆளாகியிருந்த அவரது ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது
கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.பின்னர் விவசாய வேலைகளை கவனித்து வந்தார்.
வழக்கம்போல் காலையில் தோட்டத்துக்குச் சென்ற சரவணன் மதியம் வீடு திரும்பினார் மனைவி அமுதா அவருக்கு உணவு பரிமாற சமையலறைக்கு சென்றார் . அப்போது அறைக்குள் சென்ற சரவணன் யாரும் எதிர்பாராத வகையில் மின் விசிறி கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேகே நகரில் பெண் மீது தாக்குதல்

திருச்சி கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் 32 வயது மதிக்கத்தக்க பெண். இவரது கணவரான கருப்பையா என்பவருக்கு பல பெண்களுடன் தொடர்பாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது மனைவி கருப்பையாவிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 1-ந்தேதி அன்று கருப்பையா, இச்சக்காமலப்பட்டி பகுதியை சேர்ந்த பெண், அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் சேர்ந்த கருப்பையாவின் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பெயரில் கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்தனர்.

வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களுக்கு கொலை மிரட்டல்

திருச்சி சிந்தாமணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் 37 வயது மதிக்கத்தக்க பெண். இவர் அதே பகுதியில் புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறார். புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே வசித்து வருபவர் சத்திய பாலா. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதன் காரணமாக கடந்த 3ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த எஸ் எம் சேட்டு (வயது 46) என்பவர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று புதிதாக கட்டி வரும் வீட்டின் வேலையை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதற்காக அவர் பணம் தருவதாகவும் கூறியுள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுக்கவே தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று திருச்சி விமான நிலையம் குளப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அப்பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது மனைவி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவர் அவரிடம் வந்து மணிகண்டன் எங்கே என்று கேட்டுள்ளார். இதற்கு அந்த பெண் எதற்கு மணிகண்டனை தேடுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது மாமனார் கணேசன் மற்றும் மாமியார் கலையரசி இதை குறித்து அர்ஜுனிடம் கேட்டுள்ளனர். ஆத்திரம் தீராத அவர் இருவரையும் கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தம்பி சென்று விட்டார். இதில் காயம் அடைந்த மணிகண்டனின் மனைவியை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விமான நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற பெல் ஊழியர் உள்பட 2 பேரிடம் ஆன்லைனில் ரூ 12 லட்சத்து 37 ஆயிரம் மோசடி

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் உள்பட இரண்டு பேரிடம் ஆன்லைனில் ரூ 12 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

திருச்சி சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவர் பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர். இவர் தனது வங்கிக் கணக்கில் இபிஎப் ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார். இவரது செல்போனில் முகநூலில் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தபோது, அப்போது அதில் வந்த ஒரு வங்கியின் வாழ்க்கை சான்றிதழ் தொடர்பாக விளம்பரம் வந்துள்ளது. பின்னர் அவர் அதை தொடர்பு கொண்டு உள்ளார். கடந்த 1-ந்தேதி அன்று அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து இவரின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்கள் ஓய்வூதிய வாழ்க்கை சான்றிதழை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை புதுபிக்க நீங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கு கொண்ட செயலியை பயன்படுத்தி இதனை புதுப்பிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய பன்னீர்செல்வம் அந்த செயலியை திறந்து பார்த்துள்ளார். பின்னர் அந்த அடையாளம் தெரியாத நபர் செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து பன்னீர்செல்வம் தனது வங்கி கணக்கை பார்த்தபோது அதில் இருந்த 9 லட்சத்து 25 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதே போல் திருச்சியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் செல்போனில் எண்ணிற்கு கடந்த 31 ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியை படித்த ராஜசேகரன் அதில் போக்குவரத்து விதிகளை மீறியதாக உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனை உண்மை என நம்பிய அவர் அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை திறந்து பார்த்துள்ளார். பின்னர் 1-ந் தேதி அன்று ராஜசேகரன் தனது வங்கி கணக்கை பார்த்தபோது அதிலிருந்த 3 லட்சத்து 37 ஆயிரத்து 229 பணம் காணாமல் போனதே கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இது குறித்து தனித்தனியாக அவர்கள் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[05/11, 12:23] DN kishore: இனி பெங்களூரு செல்ல வேண்டாம்

ஆதார் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மையம் திறப்பு

ஆதார் சேவா கேந்திரா மையம் இன்று திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இன்று மண்டல இயக்குனர் கர்ணன் ராகுல் ஜெயந்த், ஆதார் சேவா கேந்திரா மேலாளர் வேணுகோபால் ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்கள்.

ஆதாரில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருந்தால் இதுவரை தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெங்களூருக்கு சென்று தான் புகார் அளிக்க வேண்டும். இது மக்களுக்கு ஆதாரில் தீர்க்க முடியாது பிரச்சினைகள் பல மாதங்கள் ஆகும். ஆனால் தற்போது திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் திறக்கப்பட்ட ஆதார் சேவ கேந்திரா மையத்தின் மூலம் ஆதாரில் முகவரி பெயர் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் திருத்தம் செய்வது ஆதார் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த மையத்திலேயே தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 8 கவுண்டர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிவதால் புதிதாக ஆதார் எடுப்பது ஆதரில் உள்ள தீர்க்க முடியாத பிரச்சினைகளை எளிதில் இந்த மையத்திலேயே சரி செய்து கொள்ளலாம். இது மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று தொடங்கப்பட்ட ஆதார் சேவை கேந்திரா மையம் ஆதார் தொடர்பான சேவைகளை எளிதாகவும் விரைவாகும் பொதுமக்கள் பெரும் வகையில் தொடங்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திட்ட மேலாளர் விஜயகுமார், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில கிளஸ்டர் மேலாளர் தினகரன், திட்ட மேலாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Secret Link