சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு, இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 8,237 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 57.79 அடியாகவும், மொத்த நீர் இருப்பு 23.068 டி.எம்.சி. ஆகவும் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மழைப்பொழிவு காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
