சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட புகழூர் மற்றும் கொடுமுடி நிலையங்களுக்கு இடையே நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வண்டி எண் 16844 பாலக்காடு டவுன்-திருச்சி விரைவு ரயில் நாளை சனிக்கிழமை மற்றும் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, காலை 6.30 மணிக்கு பாலக்காடு டவுனிலிருந்து புறப்பட்டு கொடுமுடி வரை மட்டுமே இயக்கப்படும். தொடர்ந்து, பராமரிப்பு பணிகள் முடிந்தபின் கொடுமுடியிலிருந்து திருச்சி ஜங்ஷன் வரை முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்
