சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக பணியாற்றிய சி.எஸ்.கர்ணன் (71), உடல்நலக்குறைவால் இன்று நவம்பர் 13-ஆம் தேதி காலமானார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கர்நத்தம் கிராமத்தில் 1955-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பிறந்த இவர், சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். நீதித்துறையில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்ட இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தனது நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.எஸ்.கர்ணன் காலமானார்
