ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவில், ஷேக் கலீஃபா பின் சயீத் சாலையில் நேற்று முன்தினம் 23 வாகனங்கள் மோதிக்கொண்ட பெரும் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சித்திக் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 21 வயது இரட்டையர்கள் மற்றும் அவர்களின் மூன்று வயது மருமகன் உட்பட மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவிலிருந்து திரும்பியபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
23 வாகனங்கள் மோதிய கோர விபத்து – 14 பேர் பலி!
