மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), ஓலா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர்கள் வாகனம் முன்பதிவு செய்யும்போதே ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே ‘டிப்ஸ்’ வழங்குமாறு கட்டாயப்படுத்தும் நடைமுறையைப் பின்பற்றியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ‘கன்ஃபர்ம் ஷேமிங்’ எனப்படும் தவறான வணிக உத்தி என்று ஆணையம் கண்டறிந்துள்ளது. இப்பழக்கத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ள CCPA, 15 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று ஓலா நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
ஓலா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்
