தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம், அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக புகாரின் பேரில், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இவ்வழக்கில் தொடர்புடைய திருவிடைமருதூர் தாலுக்கா, திருமாந்துறை, பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.
அதன்ப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் அவர்களின் பரிந்துரையின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆர். ரேவதி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
