Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் வகையில், நகர காவல் உதவி மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் துவக்கி வைத்தார். மேலும் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலை கட்டுப்படுத்தும் வகையில் சோலார் தொப்பியும், கைகளில் மட்டும் உறையும் கொடுக்கப்பட்டது. மேலும் இன்று தொடங்கி கோடை காலம் முடியும் வரை போக்குவரத்து காவலர்களுக்கு நான்கு வேலைகளும் மோர் வழங்கப்படும். மேலும் சோலார் மூலம் இயங்கும் ஒளிரும் சாலை தடுப்பான்கள் கரூர் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்படும். சென்ற வருடத்தை விட இந்த வருடம் விபத்தினால் ஏற்படும் மரணங்கள் சற்று குறைந்துள்ளது. மேலும் விபத்து மரணங்களை குறைக்கும் வகையில் கரூர் மாவட்ட காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக எடுத்து வருகின்றனர் என எஸ்பி சுந்தரவதனம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!