சென்னை திருவிக நகரில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிடச் சென்ற இளைஞரின் முகத்தில் பெண் ஊழியர் ஒருவர் கொதிக்கும் சாம்பாரை ஊற்றியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் முகத்தில் காயமடைந்த இளைஞர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட அம்மா உணவகத்திற்குச் சென்று பெண் ஊழியரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவகத்தில் தகராறு நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
அம்மா உணவகத்தில் சாப்பிடவந்த இளைஞர் முகத்தில் சாம்பாரை ஊற்றிய பெண்
