Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை… மக்கள் மகிழ்ச்சி

கரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை... மக்கள் மகிழ்ச்சி

கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் மழை: குளிர்ச்சியான சூழலால் மக்கள்
மகிழ்ச்சி.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று மதிய நேரத்தில் கரூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார், சின்ன ஆண்டான் கோவில், நெரூர், ஐந்து ரோடு, மண்மங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கத்துக்குப் பிறகு பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!
Secret Link