Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதயநிதி பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக தீர்மானம்!

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதிதிராவிடர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- திருச்சியில் நடைபெற்ற திமுக ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டத்தில் தீர்மானம்..

திருச்சி தில்லைநகரில் சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் மற்றும் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் அனைத்து மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வார்டுகளில் கழக இரு வண்ண கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சியைச் சமாளிக்க விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க திமுக தலைவர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி 6 தொகுதிகளிலும் கழகம் அறிவிக்கும் வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் குற்றங்களைத் தடுத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் செஞ்சியில் மாயமான சிறுமியை ஒரு மாதத்திற்கு மேலாகியும் மீட்காதது குறித்தும் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய தவெக ஆட்சிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் நலக்குழு தலைவர் மருதூர் ராமலிங்கம், துணைச் செயலாளர் துரைசாமி, இணை செயலாளர் வி பி ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

error: Content is protected !!
Secret Link