திருச்சி தில்லை நகர் ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் 35 வயது பெண். இவரது மகன் பக்கத்து வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 36 வயது மற்றொரு பெண் அந்த சிறுவனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண்ணிடம் சிறுவனின் தாய் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த பெண், சிறுவனின் தாயை கல்லால் தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை கைது செய்தனர்.
திருச்சியில் சிறுவனின் தாயை தாக்கிய பெண் கைது…
