மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள இரண்டு இடைக்கால நிர்வாகிகளை நியமித்து உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 27) உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் வி.பார்த்திபன் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக (Receivers) நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
