சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.28) ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுகவின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீத நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எந்தச் சூழலிலும் குறையக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து திமுக ஆலோசித்தது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் நலனில் சமரசமில்லை. மக்கள் தொகை அடிப்படையில் எண்ணி்க்கை மாறினால் அது தமிழ்நாட்டிற்கு பேராபத்தாகிவிடும்.தமிழ்நாட்டிற்கு நிகழவிருந்த பேராபத்தை நாம் தடுத்துவிட்டோம் .நாம் எதிர்பார்த்தபடியே தொகுதி மறுவரையறை மசோதா வந்துள்ளது. ஏற்கனவே நியாயமான தொகுதி மறுவரையறைக்காக கூட்டு ஆலோசனை கூட்டத்ில் எடுத்த முடிவுப்படி ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
தொகுதிகளின் எல்லைகளை சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக மாற்ற நினைத்தால் தடுப்போம். உணர்ச்சிவசப்படாமல் தொலைநோக்கு பார்வையுடன் மறுவரையறை பிரச்னையை அணுகியுள்ளோம்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றும் முயற்சியில் வெற்றிப்பெற்றுள்ளோம். தமிழ்நாட்டிற்கு நிகழ இருந்த பேராபத்தை நாம் தடுத்துவிட்டோம். நாம் எதிர்பார்த்தபடியே தொகுதி மறுவரையறை மசோதா வந்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் 22 எம்பிக்கள் ஆதரவு அளித்ததால் பலம் 341 ஆக உயர்வு. மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற 162 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
