Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆசைக்கு இணங்காவிட்டால்…. நிர்வாண படத்தை வெளியிடுவோம்….நடிகைக்கு மிரட்டல்

மேற்குவங்காளத்தின் பிரபல நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. இவர் ஷிப்பூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் தங்கள் ஆசைக்கு இணங்கும்படி தன்னை மிரட்டுவதாக நடிகை ஸ்வஸ்திகா போலீசில் புகார் அளித்துள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்தால் மார்பிங் செய்த என் நிர்வாண புகைப்படத்தை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டுவிடுவோம் என தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் இமெயில் மூலம் மிரட்டுவதாக நடிகை ஸ்வஸ்திகா புகாரில் தெரிவித்துள்ளார்.

நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நடிகைக்கு மிரட்டல் விடுத்த உதவி தயாரிப்பாளர் தற்போது அமெரிக்காவில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!