Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராதா (73). மீன் பிடி தொழிலாளியான இவர் இன்று காலை குளித்தலை காவிரி ஆற்றில் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று உள்ளார். ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வலையினை நீரினுள் கம்பிகளால் நட்டு வைத்து வந்துள்ளார். அப்போது புதை மணலில் சிக்கியவர் அதிலிருந்து தப்பிப்பதற்காக முயற்சித்தும் பலன் அளிக்காமல் நீரில் மூழ்கினார்.   உடன் மீன் பிடிக்க வந்தவர்கள் அவரை மீட்டு குளித்தலை ஜிஎச்சிற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!