Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரசவித்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த டாக்டர்கள்….

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலில் உள்ள அரசு தாய் நல மருத்துவமனையில் கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நவ்யஸ்ரீ என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குழந்தையை எடுத்தனர். அந்த பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வயிற்று வலியால் 18 மாதங்கள் அவதிப்பட்டு வந்துள்ளார்.

பின்னர் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்த போது,  வயிற்றுக்குள் பஞ்சுத்துணி இருப்பது கண்டறியப்பட்டது. எனவே மீண்டும் அந்த பெண் சிகிச்சைக்காக தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் காட்டன் துணி பண்டல் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் பற்றி அந்த பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!