Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் 8வதுவார்டில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர் புளியஞ்சோலையில் இருந்து சுமார் 33 ஆண்டுகளாக வந்த குடிநீரை கடந்த 20 நாட்களாக ஊராட்சி நிர்வாகம் வழங்காததை கண்டித்து துறையூர் புளியஞ்சோலை

சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டதால் இப்பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு உப்பிலியபுரம் (கிராம ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!