Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜாமத் தலைவருக்கு கூரியரில் வந்த மண்டை ஓடு… பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம்,64,. இவர் அப்பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலின், ஜாமத் தலைவராக உள்ளார்.

இவருக்கு நேற்றுமுன்தினம் இரவு 7:00 மணிக்கு, ஃப்ரெஞ்ச் எக்ஸ்பிரஸ் கூரியர் மூலம், பெட்டியில் பார்சல் வந்துள்ளது. அதில் முறையான அனுப்புநர் விலாசம் இல்லாமல் இருந்துள்ளது. சந்தேகத்துடன் பார்சலை வாங்கிய முகமது காசிம் பிரிக்காமல் வைத்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் முகமது காசிம் மகன் முகமது மஹாதிர், பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அதில், மண்டை ஓடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து முகமது மஹாதிர் தனது தந்தை முகமது காசிமிடம் கூறினார்.

பின்னர், முகமது காசிம் திருவையாறு போலீசிக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு டி.எஸ்.பி., ராஜ்மோகன், பார்சலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கூரியரில், அனுப்புநர் பெயர் நவ்மன்பாய் கான் என இருந்தது. அதில் இருந்த மொபைல் எண்ணில் போலீசார் தொடர்புக்கொண்ட போது, அந்த அழைப்பு வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவரின் எண் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!