Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி ஆற்றில் செல்பி எடுத்தபோது பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி

பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் சன்னப்பட்டணா பகுதியைச் சேர்ந்த விஜயம்மா (50), சைத்ரா (20), சுவேதா (38), பிரியங்கா (28) மற்றும் மகேஷ் ஆகியோர் மண்டியா மாவட்டம் முத்தத்தி வனப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயசாமி கோவிலுக்குச் சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடிந்தபின், அவர்கள் காவிரி ஆற்றங்கரையில் நின்று செல்போனில் ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக விஜயம்மா ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத அவரைப் காப்பாற்ற குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக ஆற்றில் குதித்ததில் 5 பேருமே நீரில் மூழ்கினர். பரிசல் ஓட்டுநர்கள் முயன்றும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்து வந்த ஹலகூர் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 5 பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!