Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 4 சிறுவர்கள்… ஒருவர் பலி…

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஆண்டவன் வேத பாடசாலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்த சில மாணவர்களும் தங்கி வேத பாடங்களை பயின்று வருகின்றனர்.

வழக்கமாக அதிகாலை நேரங்களில் இங்கு பயிலும் மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குழிக்க செல்வதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இன்று காலை யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார் – மேலும் அச்சிறுவனுடன் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆந்திராவை சேர்ந்த அபிராம் (வயது 13), மன்னார்குடியை சேர்ந்த

ஹரி பிரசாத் (வயது 14) ஆகியோரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள் – தகவல் தெரிந்த பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் தேடிய தியனைப்பு துறையினர் கோபால கிருஷ்ணன் என்கிற சிறுவனை மட்டும் உயிருடன் மீட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் சுழல் பகுதிகளில் உள்ளதால் விடுமுறை நாட்களில் மாணவர்கள் குழிக்க செல்வதை தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்
படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!