Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.66 லட்சம் காணிக்கை….

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ரூபாய் 66,05011 , லட்சம் தங்கம் -201 கிராம் , வெள்ளி – 1452 கிராம் மற்றும் 241 அயல் நாட்டு ரூபாய் நோட்டுகளும் வரப் பெற்றது.

திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் இரவிச்சந்திரன் ,

கோயில் மேலாளர் தமிழ்செல்வி ,உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , மீனாட்சி, உதவி கண்காணிப்பாளர்கள் மோகன் , அண்ணாதுரை , பழனிச்சாமி , ஆய்வாளர்கள் மங்கையர் செல்வி ,பாஸ்கரன் , பானுமதி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!