Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜப்பானில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதையடுத்து, சிங்கப்பூரில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் சென்றடைந்தார். ஜப்பான் நாட்டின் கான்சாய் ஏர்போட்டில் தரையிறங்கிய முதல்வர் ஸ்டாலினை, ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி மலர்கொத்து வழங்கி வரவேற்றார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில்

நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், ஜப்பான் நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து  ஜப்பானில் பஸ்சில் பயணம் செய்தார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து ஜப்பான் நிறுவனத்தின் பணியாளர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன்  புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!