Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கருணாநிதி பிறந்த நாள்… தஞ்சையில் தி.மு.க.வினர் பேரணி…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தை அடைந்தனர். பின்னர் அங்குள்ள கருணாநிதி, அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும், மேயருமான சண்.ராமநாதன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் இறைவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் ஒன்றிய, பகுதி, கிளை செயலாளர்கள், பிரிவு செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிகள், மண்டலக்குழு தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!