Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் மகேஷ் தொகுதியில் பள்ளியின் அவல நிலை….மாணவர்கள் கடும் வேதனை…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் ஆதி திராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் பல மாதங்களாக இருப்பதாகவும் முன் நுழைவாயில் கதவு உடைந்த நிலையில் இருப்பதாகவும் இதனால் பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் மாணவர்களுக்கான கழிப்பிடம் நீரின்றி இருப்பதால் உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் இதனால் அந்தக் கழிப்பிடத்தை சமூகவிரோதிகள் மது அருந்தவும் மற்றும் பல தீய பழக்கங்கள் செய்வதற்கு கூடாரமாக அமைந்து விட்டதாகவும் மேலும் மாணவர்களுக்கு குடிதண்ணீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை என்றும் இந்த கடும் வெயில் காலங்களில் மாணவர்கள் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும் என்ற மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர் ஆனால் பள்ளியில் குடிநீர் இல்லாமல் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி

வருகின்றனர் இவற்றைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோடை விடுமுறையிலேயே இப்பள்ளியின் அடிப்படை வசதிகளை செய்திருக்க வேண்டும் அதிகாரிகளின் மெத்தன போக்கால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் இப்பள்ளியின் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் தமிழகத்தில் மாதிரி பள்ளிகளாக ஆறு பள்ளிகளை தரம் உயர்த்த உள்ள நிலையில் 6 பள்ளிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!