Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சைக்கிள்களை குறி வைக்கும் கும்பல்.. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி ஸ்ரீரங்கம் ராயர் தோப்பு பார்வதி அம்பாள் நகர் பகுதி சேர்ந்தவர் அனிஷ் பாலாஜி. இவர் தன்னுடைய வீட்டில் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி வைத்திருந்து உள்ளார்.கடந்த 21ம் தேதி நள்ளிரவில் ஒரு மணிக்கு மேல் இளைஞர் அவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே இருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள 9 கியர் கொண்ட சைக்கிளை திருடி சென்றுள்ளார். இந்த திருட்டுச் சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசில்  அனிஷ் பாலாஜி புகார் அளித்துள்ளார் . கடந்த ஒரு மாதத்தில் இத்தெருவில் இதே போல் மூன்று சைக்கிள்கள் திருடுபோய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முகமூடி ஏதும் அணியாமல் சாதாரணமாக வீட்டின் சுவர் ஏறி குதித்து சைக்கிள் திருடிய உள்ளார். அந்த இளைஞர் மற்ற சைக்கிள்களை திருடி உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தத்தில் இவருடைய குறி விலை உயர்ந்த சைக்கிள்கள் என்பது தற்பொழுது தெரிந்துள்ளது. அதற்கான சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளது. அதில் சைக்கிளை திருடுபவரின் முகம் தெளிவாக தெரிகிறது. புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!