Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலில் முழு தீக்குச்சி…

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே உள்ள ஏலூர்ப்பட்டி அரசு டாஸ்மார்க் கடையில் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கல்லூர்ப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஸ்ரீதர் (34). இவர் ஒரு மாற்றுத்திறனாளி எம்.சி டீலக்ஸ் பிராந்தி ஒரு ஃபுல் பாட்டில் கேட்டுள்ளார் அதற்கு கடையில் பணிபுரிந்த பெரியசாமி என்பவர் இரண்டு ஆப் பாட்டிலாக கொடுத்துள்ளார். இந்த மதுவிற்கு ஸ்ரீதர் ரூபாய் 660- ஐ ஜிபே மூலம் பெரியசாமியின் செல்லுக்கு செலுத்தியுள்ளார்.

பின்பு ஒரு ஆப் பாட்டிலை திறக்க முற்படும்போது அந்த மது பாட்டிலில் ஒரு முழு தீக்குச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் அந்த தீக்குச்சியில் உள்ள கந்தகம் முழுவதும் மதுவில் கலந்துள்ளது இது குறித்து

அங்கு கடையில் பணிபுரியும் பெரியசாமி என்பவரிடம் கேட்ட பொழுது இது எங்களுக்கு தெரியாது வரும் மது பாட்டில்களைத்தான் நாங்கள் விற்பனை செய்கிறோம் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என கூறிவிட்டார் .

இந்த மதுப் பாட்டிலை வாங்கிய ஸ்ரீதர் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர் இந்த டாஸ்மார்க் கடையில் வாங்கிய பாட்டிலில் உள்ள மதுவை குடித்து இறந்தால் என் குடும்பத்தை யார் பார்ப்பது? எனவும் இதுபோல் மது பிரியர்களை அரசு ஏன் இப்படி வஞ்சிக்கின்றது என கூறியுள்ளார். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டரை  சந்தித்து புகார் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இச்சமூகத்தால் அப்பகுதி மது பிரியர்கள் மிக வேதனை அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!