Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

தமிழ்நாடு நாள் ஜூலை 18ஐ கொண்டாடும் வகையில் திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தபேரணியிலும் கலந்து கொண்டார் . மேலும் திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு

 

விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் கலெக்டர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், உதவி இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத்துறை பாலசுப்ரமணியன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், கல்வித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!