Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் “தமிழ்நாடு நாள் விழா”  விமரிசையாக கொண்டாடப்பட்டது.  புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியரகம் வரை, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  இதில்  மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி,  பயிற்சி துணை கலெக்டர் ஜெயஸ்ரீ,

நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .எம்.மஞ்சுளா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.சிவக்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாள்  விழாவையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை கலெக்டர்  துவக்கி வைத்து பார்வையிட்டார். விழாவையொட்டி நடைபெற்ற  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.  இதற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை சிறப்பாக செய்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!