Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை மாவட்டத்தில் 52 துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்…

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய வரதராஜன், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய ராஜரத்தினம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவிடைமருதூர் ஒன்றியத்தில் பணியாற்றிய புவனேஸ்வரி கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றிய நாகராஜன் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்துக்கும், திருப்பனந்தாளில் பணியாற்றிய விஜயகுமார் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணம்- ஒரத்தநாடு கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய மோகன்குமார் ஒரத்தநாடு ஒன்றியத்துக்கும், ஒரத்தநாட்டில் பணியாற்றிய தனசேகர் திருவோணம் ஒன்றியத்துக்கும், திருவோணத்தில் பணியாற்றிய இளையராஜா தஞ்சை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு கண்காணிப்பாளராகவும், மாற்றப்பட்டு உள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!