Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது சார்பில், ஜாமீன் கேட்டு  சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அமைச்சரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி இருந்தனர். இந்த மனு இன்று செசன்ஸ் நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி,  இது குறித்து அமலாக்கத்துறை   பதிலளிக்க  உத்தரவிட்டார். அதற்கு அமலாக்கத்துறை  அவகாசம் கேட்டதால், வரும் 15ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு  நீதிபதி உத்தரவிட்டார். எனவே வழக்கு மீண்டும் 15ம் தேதி  விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!