Skip to content

திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

தமிழகத்தில் இன்று 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை  கோட்டைமேடு, GMநகர், உக்கடம், போத்தனூர் உள்பட பல்வேறு பகுதிகளில்  இந்த சோதனை நடக்கிறது. உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த தமிமூன் அன்சாரி வீடு, கோவை மாநகராட்சி 82 வது வார்டு  திமுக கவுன்சிலர் முகஸீரா இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே அன்சாரியின் வீட்டார்,

அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வாக்குவாதம்  செய்தனர்.  பின்னர் அதிகாரிகள் சோதனை நடத்தினர். உக்கடம் கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடப்பதாக  கூறப்படுகிறது.
இந்த சோதனையின் போது வீடுகளில் உள்ள கணினிகள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவைகைள அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!