Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை,  சில தினங்களுக்கு முன்  பேரறிஞர் அண்ணா பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார்,   சி.வி. சண்முகம்,  வேலுமணி, உதயக்குமார் என அனைவரும்  அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர்.  ஜெயக்குமார், பத்திரிகையாளர்களை சந்தித்து  பாஜகவுடன் கூட்டணி இல்லை . இது தான் கட்சியின் நிலைப்பாடு என்றார்.

இந்த நிலையில் இன்று அதிமுக தலைமைக்கழகம் என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்  மாவட்ட செயலாளர்கள்,  மாநில நிர்வாகிகள் ஆகியோருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:

பாஜக குறித்து அதிமுகவினர் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்.  கூட்டணி தொடர்பாக அதிமுக தலைமை அதிகாரபூர்வமாக  தெரிவித்து விட்டதால்  வேறு யாரும்  கருத்து தெரிவிக்க வேண்டாம்.  கூட்டணி குறித்தோ,  பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம்.  பாஜக குறித்து   அதிமுக நிர்வாகிகள்  பேசினால் குழப்பம் ஏற்படும்.  போஸ்டர் ஒட்டுவது,  சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்த்து விடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!