Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார் இதில் துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட 200 விவசாயிகள் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள் நுழைவு வாயில் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து கலெக்டர் பிரதீப் குமார்  விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது

அய்யாக்கண்ணு ஒரு கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்களிடம் கலெக்டர் பிரதீப்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வக்கீல் அய்யாக்கண்ணு விவசாயிகளிடம் கலெக்டர் கூறிய விளக்கத்தை எடுத்து கூறினார் இதையடுத்து விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் போது த.மா.கா. விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் புங்கனூர் செல்வம், புலியூர் தங்கவேல், ஸ்ரீரங்கம் பாலு தீட்சதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!