Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டையார் தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் சரவணன்(21) .கூலித் தொழிலாளி.

இவர் அதே பகுதியில் வசிக்கும் திருச்சி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.

சரவணன் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் அவர் வீட்டில்  தனிமையில் இருந்த போது வீட்டின் சுவர் ஏறி குதித்து மாணவியிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் தந்தை குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணைனை கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சரவணனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் கிளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!