Skip to content

அரசு ஆஸ்பத்திரியில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்….

தஞ்சை அருகே வல்லம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.அகிலன் தலைமை வகித்து பேசுகையில்.… கடந்த கால மற்றும் கொரோனா காலகட்டத்தில் நெருக்கடியான காலநிலையில் பணியாற்றிய பணியாளர்கள் கடந்து வந்த பணிச்சூழலை நினைவு கூர்ந்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஆண்டின் துவக்கத்தினை வரவேற்கும் வகையிலும் அரசு அலுவலகங்களில் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடும் நடைமுறையை பின்பற்றி இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. மருத்துவ

பணியாளர்கள், மருத்துவர்களை வாழ்த்தியும் சால்வை அணிவித்தும் கேக் வெட்டியும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழச்சியில் சுமார் 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!