Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை உயர்வு…

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,795 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,360 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் 5,835 ரூபாயாகவும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,680 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 6,305 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, 50,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 80.20 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 80,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!