Skip to content

வீட்டு முன் திரண்ட ரசிகர்களுக்கு…..ரஜினி புத்தாண்டு வாழ்த்து

2024 ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்தது.  ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி வருகிறார்கள்.  சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் புத்தாண்டு தினத்தில் தங்கள்  சூப்பர் ஸ்டாரை சந்தித்து விடவேண்டும் என  இன்று காலையே சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டு முன்  திரண்டனர்.

இதை அறிந்த ரஜினிகாந்த்,  வெளியே வந்து  தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து கையசைத்தும், கைகளை தலைக்கு மேல் கூப்பியும் வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். புத்தாண்டையொட்டி வாழைமரம், தோரணங்களால் நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!