Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரன்சி அலங்காரத்தில் ….. நாகை ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி

ஆங்கில புத்தாண்டையொட்டி  நாகை அருள்மிகு ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி ஆலயத்தில் பணத்தால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆங்கில புத்தாண்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோயில் பிரகாரம் முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளை தொங்கவிட்டபடி, விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் பணப்பந்தலால் ஜொலித்தன. மேலும், சிவ லிங்கத்திற்கு தங்க காசுகளால் அலங்காரம் செய்தும், பிரகாரம், கருவறை ஆகிய பகுதிகளில் 10, 20, 100, 200, 500 நோட்டுகள் வரை பயன்படுத்தி பணப்பந்தல் அமைக்கப்பட்டும் ஐம்பொன் காசுகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 6 லட்சத்து 37 ஆயிரம் மதிப்டில் ஸ்ரீ சத்குரு சம்கார சுவாமிகளுக்கு பண அலங்காரம் செய்யப்பட்டு, தங்க காசுகள் தங்கமுலாம் பூசப்பட்ட டாலர்கள் காயின்கள் ஆகியவை வைக்கப்பட்டது வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் சத்குருவின் உருவப்படமும், ஐந்து ரூபாய் நாணயங்களும் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!