Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5 மாநிலங்களில் போட்டி.. பானை சின்னம் கேட்கும் திருமா..

சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது.. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளா ஆகிய தென் இந்திய மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். எனவே எங்கள் கட்சிக்கு பானை சின்னத்தை முன்கூட்டியே ஒதுக்கித்தர வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை தேர்தல் கமிஷனில் அளித்து இருக்கிறாம். எங்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளிலும் பானை சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிட்டோம். அப்போது தி.மு.க. எந்த நெருக்கடியையும் எங்களுக்கு தரவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் வேறு கருத்தை வைத்தது உண்மை. அப்போது வெற்றியை மட்டுமே கருத்தில்கொண்டு அந்த ஆலோசனை வழங்கப்பட்டதே தவிர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அது செயல்படவில்லை. எனவே அது இப்போதைக்கு ஒரு பிரச்சினை இல்லை என்பது எங்களது கருத்து. 2001-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் பொதுத்தேர்தலின்போது பொதுத்தொகுதிகளை கேட்கிறோம்.  எனவே இது புதிய கோரிக்கை அல்ல. சட்டமன்ற தேர்தலில் 2  தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே அடிப்படையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பொதுதொகுதி ஒன்றை கேட்கிறோம் என்றார் திருமா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!