Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, பொன்மலைபட்டியில் ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் அனுகிருஷ்ணன். இவர் திருச்சியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார்.திருமணம் ஆகிஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி, குழந்தை கேரளாவில் வசித்து வருகின்றனர். இவர் தனது நண்பர்களுடன் திருச்சி பொன்மலைப்பட்டி பாரதிதாசன் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு மனைவியிடம் போனில் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் விரக்திஅடைந்த அனுகிருஷ்ணன் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!