Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்….

அரியலூர் அண்ணா சிலை அருகே இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம வேலைக்கு சம ஊதியம் என்று திமுக தேர்தல் அறிக்கை என் 311ல் அறிவித்தவாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளதை கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!